ஸ்தலபுராணம்

  • கோவிலின் ஸ்தலபுராணம் ஒர் அதிசயதக்க உண்மையாகும். ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஸ்ரீ துரைப்பாண்டி சுவாமிகளிடம் 1967 முதல் அருள்வாக்கினால் பல உத்தரவு வரங்களை வழங்கி வந்தாள். ஒரு சமயம் தான் இத்திருத்தல இடத்தில் கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகவும் மீண்டும் அவ்விடத்திலே மீண்டும் குடிகொண்டு ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் கேட்ட வரங்களை அளித்து அருள் புரிவேன் என்று அருளியுள்ளார். மேலும் சுவாமிகளிடம் தனக்கு ஒரு கோவிலை  உருவாக்கி தன்னை பூஜித்து வரவேண்டும் என்றும் தான் சுவாமிகளிடத்தில் ஐக்கியமாகி அவர் ரூபத்தில் அருள்வாக்கு சொல்லி வருவேன் என்றும் கூறியுள்ளார்.
  • தற்போது 38 ஆண்டுகள் கழித்து H.M.S காலனி, அருணாச்சலேஸ்வரர் நகர் ராஜ ராஜேஸ்வரி அம்மன் காலனியில் இடத்தை சுட்டிக்காட்டி ” இது என் இருப்பிடம் ” இதில் ஒரு கோவில் அமைத்து அருள் வாக்கு வழங்கும்படி உத்தரவு பிறப்பித்தாள்.
  • தற்போது குடிலில் குடிகொண்டிருக்கும் அம்மனுக்கு ஆன்மிக அன்பர்கள் சுமார் 5 சென்ட் நிலம்Arulmigu Sri Rajarajeswari Amman Religious and Charitable TRUST பெயரில் வாங்கப் பெற்ற திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன..
  • சிறப்பு : பிரதிமாதம் வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களிலும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஸ்ரீ துரைப்பாண்டி சுவாமிகள் மூலமாக அருள்வாக்கு அளித்து பல பக்தர்களுக்கு கேட்கும் வரங்கள் அளிக்கின்றாள்.